கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா…

கோவையில், M.K தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் மற்றும் ஏழிசை மன்னர் M.K தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள் விழா கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடல் அருகே விமர்சையாக நடைபெற்றது.

img 20240902 wa00005641392187322619613 | கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா...

img 20240902 wa00026150736059685663304 | கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா...

இந்த விழா, தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் தலைமையில் நடத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் 21-ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்திற்காக பாடுபடும் தலைவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

அத்துடன், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை தலைவர் பாண்டியன், தமிழகத்தில் பொற்கொல்லர் நல வாரியம் செயல்படவில்லை என்றும் அதை கைவினையாளர்கள் நல வாரியமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தச்சு தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், பாத்திரம் வேலை செய்பவர்கள், சிற்பம் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றும், தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

இதையும் படிக்க  கிராமப்புற மக்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ரீரங்கத்தில் 100 ஆண்டு பாரம்பரியத்துடன் வழுக்கு மரம் ஏறும் உறியடி விழா கொண்டாடப்பட்டது...

Mon Sep 2 , 2024
திருச்சியின் ஸ்ரீரங்கம் பகுதியில் கிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் இந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு மிகவும் பிரபலமானது. இவ்விழா கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள கண்ணன் பஜனை மடத்தில் இந்த உறியடி உற்சவம் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக, 50 அடி உயரத்தில் வழுக்கு மரம் நிறுவப்பட்டு, அதன் உச்சியில் மாலையுடன் சிறிய […]
IMG 20240902 WA0006 | ஸ்ரீரங்கத்தில் 100 ஆண்டு பாரம்பரியத்துடன் வழுக்கு மரம் ஏறும் உறியடி விழா கொண்டாடப்பட்டது...