வருகின்ற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடைசி விடுமுறை நாளான இன்று பொதுமக்கள் பலரும் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர்.
கோவையில் டவுன்ஹால், கிராஸ் கட், பிரகாசம், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளை வாங்கிச் சென்றனர்.
பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.
கோவையில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் சாலையின் இரு புறங்களிலும் பேரிகேட்டுகளை அமைத்து பொதுமக்கள் அதற்குள்ளாகவே நடக்கும்படி ஏற்பாடு செய்திருந்தது.
இதனால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் பாதிக்கப்படவில்லை. மேலும் இப்பதிகளில் வாட்ச் டவர் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.