கோவை ,மரக்கடை மானியத்தோட்டத்தில், மீலாடிநபி விழாவை ,பிரண்ட்ஸ் ஃபெடரேசன் இளைஞர்கள் சமய நல்லிணக்க விழாவாக நடத்தினர், நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாளை யொட்டி அனைத்து சமூக தலைவர்களை அழைத்து சிறப்பு செய்தனர்.
விழாவில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் “மெட்டல்” சலீம் தலைமையில் , தமிழ் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் A.K. நூருல்லா வரவேற்புரை ஆற்ற,
S.சையத் சுஹேல், R. ஆரீப், S. சாதிக் பாட்சா, முன்னிலையில், சமய நல்லிணக்க சங்க தலைவரும், தமிழ் நாடு அரசு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் ஹாஜி J.முஹம்மது ரஃபி சிறப்புரையாக குரானில் அன்பை போதிப்போம்,தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு பல நன்மைகளை செய்து தருகிறது, தையல் மிஷின், சிறுதொழில் கடன் உதவி அதனை பெற்று பெண்கள் முன்னேற வேண்டும் என்றார்.
முன்னதாக குழந்தைகள் பங்கேற்ற நடனம், இஸ்லாமியஇசை நிகழ்ச்சியும் நடந்தது சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அல்ஹாஜ் M. அப்துர் ரஹமான் ,பேரூர் ஆதினமடம் உமாபதிதம்புரான்,தமிழக கிருத்துவ வெள்ளாளர் சங்க தலைவர் S.ஆனந்தன், திருக்குறள் கவிஞர். .M.G.அன்வர் பாட்சா, காங்கிரஸ் மாநில் சிறுபான்மை கமிட்டி ,கோட்டை செல்லப்பா, ஜீவ சாந்தி அறக்கட்டளை சலீம், பல் சமய நல்லுறவு இயக்க செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் இஸ்மாயில், நன்மையினர் பக்கம் அழைப்பாளர் முகம்மது முஸ்தபா ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள், இதில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள்,இஸ்லாமிய இளைஞர்கள், ஜமாத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியைஅபுதாஹீர் ஒருங்கிணைத்தார், முடிவில் நிசார் நன்றி கூறினார்,