இன்று (ஆக. 16) காலை, புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோளுக்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் அதிகாலை 3 மணியளவில் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஓஎஸ்-08 என்பதைக் வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படங்கள் எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 176 கிலோ எடையுள்ள இசெயற்கைக்கோள், ஒரு ஆண்டு ஆயுட்காலத்துடன், தரையிலிருந்து சுமார் 475 கி.மீ. தொலைவில் புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.
இந்த செயற்கைக்கோளில் மூன்று ஆய்வு சாதனங்கள் உள்ளன: எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பிராரெட் பேலோடு (இஓஐஆார்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (ஜிஎன்எஸ்எஸ்-ஆார்), மற்றும் சிக் யுவி டோசிமீட்டார். இவற்றின் மூலம் பேரிடர் மேலாண்மை, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரவுகள் ஆகியவற்றை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும்.