
நீட் தேர்வுக்கு மணமகன்-மணமகள் போல் சீருடையில் சென்றால் தாலி கழற்றிவிட்டு தான் தேர்வுக்கு அனுமதி, என்று கூறுகிறார்கள். இந்நிலையில், உ.பி., பீகாரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது; தமிழ்நாட்டில் மட்டும் தான்.
இந்த நிலை நீடித்தால், நீட் பயிற்சி மையங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக தாக்கும் என்று திருச்சியில் பண்ருட்டி வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே சாதி அரசியலால் பிளவுபட்ட தமிழக மக்கள், அண்ணாமலை போன்ற தந்திரமிகு தலைவர்கள் வந்த பின் மதத்தால் வேறுபட்டுள்ளனர்.

சிவாஜி, சரத்குமார், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் போன்றோர் கட்சி தொடங்கியதும், அதன் முடிவுகள் மக்களுக்கு தெரிந்ததே.
உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதவர் நேரடியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜார்ஜ் கோட்டையை பிடிக்க நினைப்பது அசாத்தியம். இதற்கான சிந்தனை விஜய்க்கு உள்ளது.
சொந்த கட்சி மாநாட்டிற்காக கூட பந்தல் கால் நடும் விழாவிற்கு வராத விஜய், முதலமைச்சர் பதவியை அடைவதற்கு வருவார் என எதிர்பார்க்க முடியாது.
நாடுகளை ஆள விரும்பும் நடிகர்கள் முதலில் மக்களின் துன்பம் மற்றும் துயரங்களில் பங்கு கொண்டு சேவையை முன்னிலைப் படுத்த வேண்டும்” – வேல்முருகன்.
