கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தர்ஷன் சிறையில் சிகரெட் பிடித்து, தனது நண்பர்களுடன் பேசுவதைக் காண்பிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, தர்ஷனுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் பணிபுரிந்து வந்த 7 சிறைத் துறை போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சிறையில் ஏற்கனவே சிசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply