தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண் டிப்ளமோ படித்து வந்த போது, தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்த நபர் காரணமாக மனஉளைச்சலுக்கு உள்ளாகி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
https://x.com/TeluguScribe/status/1825418108968071592?t=HYsLgV8NuUUtJ7XlsVbuXw&s=19
ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 17 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது இரண்டு தம்பிகளுக்கும் ராக்கி கயிறு கட்டிய இந்த சம்பவம், மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது…
Leave a Reply