தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம் செய்யப் போகிறார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன் பயணிக்கிறார்.
இந்த பயணத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் எனவும், பயணத்தின் திகதி மற்றும் குறித்த விவரங்களை முதல்வர் அலுவலகம் விரைவில் அறிவிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.