
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா-பிருந்தாவனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த நிகழ்வு ஏற்ப்பட்டுள்ளது. பேருந்து தீப்பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள், பேருந்தை பின்தொடந்து ஓட்டுநரை பேருந்தை நிறுத்தச் சொல்லிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பேருந்தில் இருந்தவர்களில் 8 பேர் தீயில் கருகி பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து தீப்பிடித்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.