அமெரிக்கா எல்லை பாதுகாப்புத்துறை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும், 5,150 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்கா உள்நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறையினரிடையே கவலைக்குறியாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, அமெரிக்கா மற்றும் கனடா அரசு, அத்தகைய சட்ட விரோத நுழைவுகளை தடுக்க புதிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு முறைகள், மேலும் சுற்றுப்புறத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Leave a Reply