ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை அதிகாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 7.25 மணிக்கு சைபர் தாக்குதலால் 14 உள்நாட்டு விமான சேவைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மணி நேரம் தாமதமானதோடு, சில சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நிலைமை விவரங்கள்:
சைபர் தாக்குதலின் காரணமாக, அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் டிக்கெட்கள் செல்லுபடியாக இருக்கும்.
பிரச்னையை தீர்க்க தொழில்நுட்ப அமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டு, ஒரு ரவுட்டரை ஷட் டவுன் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் கூறியதாவது:
“நிலைமை சீரானதும் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை பகிருவோம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது விமான போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.