Tuesday, January 21

இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி

இலங்கையில், கடந்த 42 ஆண்டுகளில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தல் வரலாற்றில், 38 வேட்பாளர்கள் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்திருப்பது மிக அதிகமானதாகும்.

நமது அண்டை நாடான இலங்கையில், அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் நடைபெறவுள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார்.

அதேபோல், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அனுரா குமார திசநாயகே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் காலக்கெடு நேற்று மாலை முடிந்தது. அவர்களின் வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளாக இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 38 பேர் இந்த தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை செலுத்தியுள்ளனர். இதில், 20 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; 18 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

இதையும் படிக்க  தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபட்...

எல்லா வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இதுவரை நடந்த அதிபர் தேர்தல்களில் மிக அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது அமையும்.

இலங்கையில் முதன்முதலாக 1982ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 6 வேட்பாளர்கள் மட்டுமே களமிறங்கினர். 2019ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிகபட்சமாக 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *