உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக் துகள்கள் ஆய்வில் அதிர்ச்சி

images 38 - உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக் துகள்கள் ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் விற்பனை ஆகும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை பிராண்டுகளிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன தற்பொழுது வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு, ‘உப்பு மற்றும் சர்க்கரையில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்‘ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வில், சாதாரண உப்பு, கல் உப்பு போன்ற 10 வகையான உப்புக்களும், இணையம் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் 5 வகையான சர்க்கரைகளும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில், உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளில் 0.1 மி.மீ முதல் 0.5 மி.மீ அளவு வரை ஃபைபர், துகள்கள், ஃபிலிம்கள், சிறிய துண்டுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வின் பின்னணியில், டாக்ஸிக்ஸ் லிங்க் நிறுவனத்தின் நிறுவனர் ரவி அகர்வால் கூறுகையில், “மைக்ரோபிளாஸ்டிக் குறித்த அறிவியல் தரவுகளை நாங்கள் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்குடன், பிளாஸ்டிக் பிரச்னையை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆய்வை மேற்கொண்டோம். இதனால், ஆராய்ச்சியாளர்களைத் தூண்டி, மைக்ரோபிளாஸ்டிக்கின் ஆபத்துகளை குறைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க வழி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.

இதையும் படிக்க  கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு

அந்த ஆய்வில், உப்பு மாதிரிகளில் 1 கிலோவுக்கு 6.71 முதல் 89.15 துகள்கள் வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், அயோடின் உப்பில் அதிகபட்சமாக 89.15 துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர், மேலும் இயற்கையான கல் உப்பில் குறைந்த அளவான 6.70 துகள்கள் இருப்பதும் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை மாதிரிகளில், ஒரு கிலோவில் 11.85 முதல் 68.25 துகள்கள் வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இயற்கை முறையில் தயாரிக்காத சர்க்கரையில் அதிகளவில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

மைக்ரோபிளாஸ்டிக் பிரச்னைகள் உலகளாவிய அளவில் அதிகரித்து, அது மனித உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர், காற்று மூலம் உடலுக்குள் நுழைந்து ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்கும் ஆபத்து உள்ளது.

முந்தைய ஆய்வுகளின்படி, ஒரு இந்தியர் தினசரி சராசரியாக 10.98 கிராம் உப்பு மற்றும் 10 தேக்கரண்டி சர்க்கரையை உபயோகிப்பதாகவும், இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts