முதலில் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், பின்னர் அமெரிக்காவிலும் பரவியது. தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் பல பகுதிகளில், குறிப்பாக புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கென்யா, ருவாண்டா போன்ற நாடுகளில் இந்த நோய் பரவி வருகிறது.
குறிப்பாக, 10 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளதாக அறியப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும், 13 நாடுகளில் 14,000 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC) தெரிவித்துள்ளது. DR காங்கோவில் மட்டும் 13,700க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் குறைந்தது 450 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவிவரும் Mpox (குரங்கு அம்மை) நோயின் நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்தியதால், உலக சுகாதார அமைப்பு (WHO) இதனை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஆராய்ச்சி, நிதியுதவி மற்றும் சர்வதேச பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என WHO தெரிவித்துள்ளது.
Mpox நோய் உடலுறவு, தோலிலிருந்து தோல் தொடர்பு, அல்லது நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. குரங்கு அம்மையின் அறிகுறிகளில், உடலில் கொப்பளங்கள், காய்ச்சல், உடல்வலி போன்றவை அடங்கும். கொப்பளங்கள் மூலம் தோன்றும் தோல் புண்கள் ஆபத்தானவையாக உள்ளன. குரங்கு அம்மையால் பாதிக்கப்படும் 100 பேரில் நான்கு பேர் உயிரிழப்படைய வாய்ப்பு உள்ளது.
Leave a Reply