கோவையில் கேஎஃப்சி – ன் ஓபன் கிச்சன் டூர்…

IMG 20240903 WA0015 - கோவையில் கேஎஃப்சி - ன் ஓபன் கிச்சன் டூர்...

நுகர்வோர்களை சமையல் அறைகளுக்குள் அழைக்கும் கேஎப்சியின் பிரத்யோக ஓப்பன் கிச்சன் டூரை கோவையில் ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய நிகழ்வுகள் கேஎப்சியின் உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தின் மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த உதவுகின்றன. சிக்கனின் வெளிப்படைதன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஓப்பன் கிச்சன் டூர் நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

img 20240903 1740029214907047248226283 - கோவையில் கேஎஃப்சி - ன் ஓபன் கிச்சன் டூர்...

கேஎப்சி பல ஆண்டுகளாக உன்னிப்பான செயல்முறைகள் மற்றும் கடுமையான சுகாதார நடைமுறைகளைக் கடைபிடித்து வருகிறது. இந்த ஓப்பன் கிச்சன் டூரில், பி.இட்.கே.எஃப்சியின் சமையல் அறையில் நுகர்வோர்களுக்கு நேரடியாக அந்த செயல்முறைகளை அனுபவிக்கவும், கேஎஃப்சியின் குழுவினரைக் சந்திக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.

கேஎஃப்சி இந்தியாவில் தனது உணவு பாதுகாப்பு தரங்களுக்கு புறம்பான எந்தவித சந்தேகத்தையும் இல்லாமல் 100% உண்மையான முழு தசை கோழியை மட்டுமே பயன்படுத்துகிறது. இத்தகைய முன்னெச்சரிக்கைகள் மற்றும் செயல்முறைகள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், சைவம் மற்றும் அசைவ உணவுகளை தனித்தனியாக தயாரிக்கவும், பரிமாறவும் விரிவான சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

இதையும் படிக்க  நெஸ்லே ஒரு நேரத்தில் 3 கிராம் சர்க்கரை சேர்க்கிறது!

கேஎஃப்சி இந்தியா முழுவதும் 240 நகரங்களில் 1100 உணவகங்களை இயக்கி, வணிகத்தில் நிலையான நடைமுறைகளை பின்பற்றுகிறது. இந்த பிராண்ட் தனது உணவுகளை வெளிப்படையாகவும், தரமானதாகவும் மக்களிடம் வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts