ஹார்வார்ட் மருத்துவ மாணவர் டாக்டர் நிக் நோர்விட்ஸ், ஒரு மாதத்தில் 700க்கும் மேற்பட்ட முட்டைகளை உண்டு, அவரது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், எதிர்பார்க்காமல், அவரது எல்டிஎல் (“மோசமான” கொலஸ்ட்ரால்) அளவு 20% குறைந்தது.
நாள் ஒன்றுக்கு 24 முட்டைகளை சாப்பிட்ட நோர்விட்ஸ், “கீடோஜெனிக்” உணவமைப்பை பின்பற்றியுள்ளார். இந்தச் செயலின் மூலம் உணவு முறைகள் தொடர்பான விவாதத்தை சமூக ஊடகங்களில் தூண்டுவதற்காக அவர் இதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.