பொள்ளாச்சியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் அவரை கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய துடிப்பில் மாற்றம் உள்ளதால் அறுவை சிகிச்சை செய்யும் போதோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னரோ உயிருக்கு கடும் ஆபத்து ஏற்படும் என கூறி உள்ளனர் இதனையடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவ மனைக்கு அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுகுடலில் ஓட்டை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே தீர்வு ஏற்படும் என்பதை உறவினர்களிடம் எடுத்து கூறி சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்
அறுவை சிகிச்சை மருத்துவர் முருகேசன் மயக்க மருத்துவர் நவாஸ் மற்றும் செவிலியர்கள் அறுவை சிகிச்சை முதுநிலை மாணவர்கள் முனி வெங்கடேஷ் மற்றும் மணிமேகலை ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் உடனடியாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர் சிறுகுடலில் ஓட்டை ஏற்பட்ட 45 cm சிறுகுடல் நீக்கப்பட்டு குடல் இணைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்துள்ளனர்.
மூன்று பெரிய மருத்துவமனைகளில் செய்ய முடியாத சவாலான அறுவை சிகிச்சையை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டதற்கு உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினர். மேலும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்