அஞ்சல் துறையில் வேலை

Screenshot 20240815 130805 Tamil News - அஞ்சல் துறையில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீல் பிரிவில் Skilled Artisans பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

**பணி**: Skilled Artisans

**காலியிடங்கள்**: 10

**டிரேடு வாரியான காலியிடங்கள் விவரம்**:

1. M.V. Mechanic – 4
2. M.V. Electrician – 1
3. Tyre Man – 1
4. Blacksmith – 3
5. Carpenter – 1

**சம்பளம்**: மாதம் ரூ.19,900 – 63,200

**வயதுவரம்பு**: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.

**தகுதி**: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எம்வி மெக்கானிக் பணிக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கும் அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய பிரிவில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கும் தேவையாகும்.

**தேர்வு செய்யும் முறை**: டிரேடு தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் பாடத்திட்ட விவரங்கள் தேர்வு நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்படும்.

**விண்ணப்பக் கட்டணம்**: ரூ.400. கட்டணத்தை இந்திய அஞ்சல் வில்லையாக எடுத்து, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

**விண்ணப்பிக்கும் முறை**: www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் சுயசான்றோப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் உறையில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

**பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி**:

The Senior Manager 
Mail Motor Service 
No: 37, Greams Road 
Chennai – 600 006

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

இதையும் படிக்க  புதிய பட்டதாரிகள் பணிக்கு தேவை (TCS)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts