
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு படி, தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதிகளில் வெளியிடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வுகளில், மொத்தமாக 25,57,354 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வை மட்டும் 8,21,057 மாணவர்கள் எழுதியுள்ளனர்.
11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேர்,
10ஆம் வகுப்பு தேர்வை 9,13,036 பேர் எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி:
12ஆம் வகுப்பு – மே 9
10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு – மே 19
தற்போது 83 மையங்களில் 12ஆம் வகுப்புக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் முடிவுகள் திட்டமிட்ட தேதிக்கு முன் வெளியாகும் என கூறப்பட்டாலும், இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு முடிவுகள் தாமதமின்றி திட்டமிட்ட தேதிகளில் வெளியிடப்படும் என மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.