மாணவர்களே தயார்: தமிழக அரசு அதிரடி திட்டம் – Email ID வழங்க அறிவுறுத்தல்

school student | மாணவர்களே தயார்: தமிழக அரசு அதிரடி திட்டம் – Email ID வழங்க அறிவுறுத்தல்

தமிழக அரசு Students are ready: Tamil Nadu Government Action Plan – Instructions to provide Email ID டிஜிட்டல் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் முகவரி (Email ID) உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இமெயில் ஐடிகளை உருவாக்குவதற்கும், அதனை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கூறுகையில், “மாணவர்கள் மேல்நிலை கல்வி அல்லது வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கும்போது, இமெயில் ஐடி அவசியமாக மாறும். கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி வாய்ப்புகளிலும் இமெயில் முக்கியமான தொடர்பு தளம் ஆகும்” என்று தெரிவித்தார்.

இம்முன்னோடி திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் இமெயில் ஐடிகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை நேரடியாக பெற முடிந்துள்ளது.

இதையும் படிக்க  வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க டிசிஎஸ் தடை

இதனை தொடர்ந்து, 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இமெயில் ஐடி தொடங்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட்டு, இமெயில் ஐடிகள் உருவாக்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் டிஜிட்டல் உலகத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் இந்த திட்டம், மாணவர்களின் டிஜிட்டல் கல்வி வளர்ச்சியை முன்னேற்றும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து: உயிர் சேதம் இல்லை...

Sat Dec 21 , 2024
திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் இயங்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென நிறுவனம் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. தகவலறிந்ததும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி வருகின்றனர். தீ விபத்தின்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறியதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை […]
image editor output image447344037 1734761375607 | திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து: உயிர் சேதம் இல்லை...

You May Like