சென்னை ஐஐடி-யில் பணிபுரிய வாய்ப்பு…

images 1 - சென்னை ஐஐடி-யில் பணிபுரிய வாய்ப்பு...

சென்னை ஐ.ஐ.டி.யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

சென்னை ஐஐடி-யில் ஜூனியர் அசிஸ்டென்ட் 30, செக்யூரிட்டி 10, ஜூனியர் சூப்பரென்டன்ட் 9, உதவி பாதுகாப்பு அதிகாரி 4, உடற்கல்வி பயிற்றுநர் 3, குக் 2, டிரைவர் 2, விளையாட்டு அதிகாரி 1, உதவி பதிவாளர் 2 பணியிடங்கள் உட்பட மொத்தம் 64 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட், சூப்பரென்டன்ட், உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, செக்யூரிட்டி பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது விவரம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.3.2024 அடிப்படையில் ஜூனியர் அசிஸ்டென்ட், குக், டிரைவர், செக்யூரிட்டி பணிக்கு 27, சூப்பரென்டன்ட், உதவி பாதுகாப்பு அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்ச்சி முறை: சென்னை ஐஐடி பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய முறைகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: சென்னை ஐஐடி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுததவேண்டும். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. கடைசிநாள்: சென்னை ஐஐடி பணியிடங்களுக்கு வரும் 12.3.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு recruit.iitm.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *