குழந்தை கல்வி திறன்களை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ள யூரோகிட்ஸ் நிறுவனம், “ஹுரேகா” எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
நிகழ்வில் லைட்ஹவுஸ் லேர்னிங் நிறுவனத்தின் ப்ரி-கே பிரிவு (யூரோகிட்ஸ்) தலைமை நிர்வாக அதிகாரி செஷாசை மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் அனிதா மதன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:
“ஹுரேகா” பாடத்திட்டம், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு “எதை சிந்திக்க வேண்டும்” என்பதற்குப் பதிலாக “எப்படி சிந்திக்க வேண்டும்” என்பதை கற்றுக் கொடுக்கிறது.
இந்த பாடத்திட்டம் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி, கற்பனையை வளர்க்கிறது. மேலும், எதையும் ஆராய்ந்து, முடிவெடுக்கும் சிந்தனையை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் குழந்தைகள் எந்தவிதமான தகவல்களையும் உள்வாங்குவதற்குப் பதிலாக, அவற்றின் ஆழ்ந்த புரிதலைக் கொண்டும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் உதவுகிறது.
பாடத்திட்டத்தின் 13 தனித்துவமான பிரிவுகள் ஒவ்வொரு குழந்தையின் கற்றல் பயணத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருப்பதால், இது கல்வி வெற்றிக்கு மட்டுமின்றி, அவர்களின் வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 210 புதிய மையங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தொடங்கப்படும் எனவும், தமிழ்நாட்டில் 300 மையங்களைத் தொடங்குவது என்பது நிறுவனத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த புதிய “ஹுரேகா” பாடத்திட்டம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ‘ப்ராஜெக்ட் ஜீரோ’ வினால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply