தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூன் 9-ந்தேதி நடைபெற்ற குரூப்-4 போட்டித் தேர்வுக்கான முடிவுகளை அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், வனக்காப்பாளர், நேர்முக உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான முடிவுகளை எதிர்பார்த்து தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.