பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான  பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

img 20241127 wa00422482891905153487437 | பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற, விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்  அழகுசுந்தரம் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். தொடர்ந்து 2020 – 21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் ரேங்க் பெற்ற  48 மாணவிகள் மற்றும்  2732 பேருக்கு  பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து புதிய பட்டதாரிகளுக்கு  கல்லூரி  முதல்வர் டாக்டர். பி. பி. ஆரதி  உறுதிமொழி ஏற்புரை வாசித்தார். இறுதியில், கல்லூரிச் செயலர் டாக்டர். என். யசோதா தேவி  நன்றியுரை வழங்கினார்.

இதையும் படிக்க  +1 தேர்வு முடிவுகள்: கோவை முதலிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு...

Thu Nov 28 , 2024
வயநாடு மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அவர் 6,22,000 வாக்குகளை பெற்று, 4,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிகழ்வுகள் தொடங்கியதும், பிரியங்கா காந்தி மற்றும் நாண்டெட் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர வசந்த் ராவ் சவான் ஆகியோர் எம்.பி. பதவியேற்றனர். அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி வயநாடு […]
IMG 20241128 121546 | பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு...