கோவை ஆசாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஃபலக் சர்வதேச பள்ளியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாணவர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் மாணவருக்கேற்ற கல்வி முறையை அனுபவிக்க முடியும்.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் ரபீக் முகமது ஜாபர், தாளாளர் பர்ஹானா ரபிக், போர்டு உறுப்பினர் அப்துல்லா ரபீக், பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ரபி, மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ராமசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாஹீர், வழக்கறிஞர் இஸ்மாயில், ஏர்டெல் அபுதாகிர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.