நெய்வேலி என்.எல்.சி-யில் 803 பயிற்சி வேலைகள்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்.எல்.சி) திறமையான இளைஞர்களுக்கான 803 பயிற்சி வேலைகள் காத்திருக்கின்றன.

பணிகள்:
மெடிக்கல் லேப் டெக்னீசியன், ஃபிட்டர், டர்னர், மெக்கானிக், எலக்ட்ரீசியன், வெல்டர், பிளம்பர் போன்ற பணிகளுக்கு பயிற்சி வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:
விண்ணப்பிக்க 14 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு:

மெடிக்கல் லேப் டெக்னீசியன் – 15 மாதங்கள்

மற்ற பணிகள் – 12 மாதங்கள்


உதவித்தொகை:

மெடிக்கல் லேப் டெக்னீசியனுக்கு ரூ.8,766

பிற பணிகளுக்கு ரூ.10,019


கல்வித் தகுதி:

மெடிக்கல் லேப் டெக்னீசியன் பணிக்கு 12ஆம் வகுப்பில் அறிவியல் எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

பிற பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ITI-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க தகுதி:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை www.nlcindia.in இணையதளத்தில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
வட்டம் – 20,
என்.எல்.சி. இந்தியா நிறுவனம்,
நெய்வேலி – 607 803.

கடைசி தேதி: நவம்பர் 6, 2024

இதையும் படிக்க  இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீபாவளி பயணத்திற்கான பேருந்து கட்டணத்தை கண்காணிக்கும் போக்குவரத்துத்துறை

Tue Oct 29 , 2024
வரவிருக்கும் தீபாவளி பண்டிகை நாளில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி செய்வதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது, அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். இதை அமல்படுத்தும் வகையில் ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீபாவளி முன்னிட்டு, சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், […]
image editor output image 462710537 1730179369954 - தீபாவளி பயணத்திற்கான பேருந்து கட்டணத்தை கண்காணிக்கும் போக்குவரத்துத்துறை

You May Like