கோவை கொடிசியா மைதானத்தில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, யுவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிகழ்ச்சி ரசிகர்கள் விரும்பும் பாடல்களும், புதுமையான முயற்சிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரசிகர்கள் மிகுந்த வைப்பு உணர்வு கொண்டவர்கள், அவர்களுக்காக சிறந்த பாடல்களை இந்த நிகழ்ச்சியில் பாட உள்ளேன் என்றார்.
யுவன் சங்கர் ராஜா, பழைய பாடல்களை ரீமேக் செய்வது, அந்த பாடலின் உண்மையான தன்மையை கெடுக்காது எனவும், இது பாடலின் மற்றொரு வெர்ஷனாகவே பார்க்கப்படும் எனவும் கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விரைவில் இசையமைப்பாளர்களின் பணியில் மாற்றத்தை ஏற்படுத்தும், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதுப் போல, இந்த தொழில்நுட்பத்தில் உண்மைத் தன்மை குறைந்ததாகவே இருக்கும் என்றார்.
விஜய் சார் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயமாக பாடல்களை அமைத்துக் கொடுப்பேன் என்று குறிப்பிட்டார். பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்துவதில் பதிப்பு உரிமை பிரச்சனைகள் இருப்பதால், முன் அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவது நல்லது என கூறினார்.
கோட்படத்திற்கான பாடல்களில், ரசிகர்கள் கருத்துகளை அடிப்படையாக கொண்டு திருத்தங்களை மேற்கொண்டதாகவும், கோவையில் முதல் முறையாக 360 டிகிரி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
டிக்கெட் விலைகள் ரூ.500 முதல் ரூ.25,000 வரை உள்ளதாகவும், 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. பார்வையாளர்களுக்காக சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, எனவும் உறுதிபடுத்தினர்.
Leave a Reply