கேரள மாநிலம் கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் பரூக் – ஷைலா தம்பதி. இவர்களுக்கு 25 வயதில் லைஜு என்ற மகன் உள்ளார். மாற்றுத்திறனாளியான லைஜு, சிறுவயதிலிருந்தே திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் நாயகனாக நடிக்கும் விஜய், படப்பிடிப்புக்காக கேரளா சென்றார். இதையறிந்த லைஜு, நடிகர் விஜய்யை பார்க்க விரும்பினார். ஆனால் படப்பிடிப்பில் அவரை காணவில்லை. பின்னர் அவரது நண்பர் அருண்லால் லைஜின் விருப்பத்தை நடிகர் விஜய்க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.
இதை அறிந்த விஜய், லைஜூவை சந்திப்பதாக பதிலளித்துள்ளார். அதன்படி, தான் தங்கியிருந்த ஓட்டல் லாபியில் லைஜாவை சந்தித்தார் விஜய். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய், லைஜூவின் குடும்பம் மற்றும் கல்வி குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் விஜய் தனது மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Leave a Reply