Tuesday, November 4

‘ஸ்குவிட் கேம்’ சீசன் 3 அப்டேட்…

2021-ம் ஆண்டு ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற கொரிய தொடரான ‘ஸ்குவிட் கேம்’ புதிய சீசன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மொத்தம் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடர், பிரபல கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் உருவானது. தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து, நெட்பிளிக்ஸில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட தொடராகும்.

இதையடுத்து, இரண்டாவது சீசன் கடந்த டிசம்பரில் வெளியானது. தற்போது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வந்த ‘ஸ்குவிட் கேம்’ மூன்றாவது சீசன் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சீசன் 3 ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடரின் டீசர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெட்பிளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“Smile, we have something special for you. Squid Game Season 3 Teaser tomorrow.”
எனக் குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டுள்ள இந்த தொடரின் புதிய சீசன், இதுவரை உள்ள சாதனைகளை மீறி புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  182 ஆண்டுகள் பழமையான குதிரை பந்தயம் முடிவுக்கு வருகிறது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *