ரஜினிகாந்தின் 171-வது திரைப்படம் அப்டேட்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

நடிகர் பட்டியல்:

சவுபின் ஷாயிர்

நாகர்ஜுனா

சுருதிஹாசன்

சத்யராஜ்

உபேந்திரா


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் தற்போது படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டுள்ளார்.

‘கூலி’ படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு வரவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கூலி’ படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமான ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க  மக்களவைத் தேர்தலில் நடிகர் அஜித் வாக்களித்தார்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Wed Nov 6 , 2024
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நவ. 6)  இன்று வெளியிடப்படுகிறது. மாநிலத்தின் அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வின் மூலம் 500 மாணவர்களும், 500 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு, […]
image editor output image1353675754 1730868994398 | முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு