கோவையில் அக்டோபர் 19ம்தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் பிரபல பாடகர்கள் ஹரிஹரன், உன்னி மேனன், எஸ். பி. சைலஜா, சிவாங்கி, எஸ். பி. சரண், மாகாபா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கச்சேரியை பாலு மற்றும் எஸ். பாஸ் ஈவன் நிறுவனம் நடத்துகின்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக, கோவை ராம்நகரில் உள்ள லயன் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் இன்வியூலன்ஸர்ஸ் சந்திப்பு நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட லயன்ஸ் இன்டர்நேஷனல் மண்டல தலைவரும், வி.கேர் சிஸ்டம்ஸ் நிறுவனருமான வெங்கட கிருஷ்ணன் தலைமையுறுத்தினார்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பாடகி எஸ். பி. சைலஜா மற்றும் சிவாங்கி சிறந்த விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 72க்கும் மேற்பட்ட யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல் வைத்தவர்கள் கலந்து கொண்டு, கார்த்திக் ராஜாவுடன் அவரது இசை மற்றும் திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கார்த்திக் ராஜா, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர் இசையமைத்த பாடல்களை பாடி காட்டினார். அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 10,000க்கும் மேல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வாருங்கள், இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்வு, எனக்கு புதுமையான அனுபவத்தை வழங்கியது என்றார் கார்த்திக் ராஜா.