1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தில் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.இன்று இளையராஜாவின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’இளையராஜா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.