இன்று ஜூன் 22ஆம் தேதியில் நடிகரும் தவெக தலைவரும் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்து வரும் 68-வது திரைப்படமான ‘கோட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில், நேற்று (ஜூன் 21) நள்ளிரவு 12 மணியளவில் `கோட்’ படத்தின் 50 வினாடி கொண்ட கிளிம்ப்ஸ் விடியோ வெளியிட்டுள்ளது. `கோட்’ கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே சுமார் 10 லட்சத்து 30 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, நடிகர் விஜய்யும், மறைந்த பாடகர் பவதாரணியின் குரலை செயற்கை நுண்ணறிவு மூலமாக வடிவமைத்து, `கோட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், நடிகரும் தவெக தலைவருமான விஜய், தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.