2025 ஆம் ஆண்டுக்குள் முக்கிய திட்டம்
சிறந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிநீக்கம் மூலம் ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவுகளை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேனேஜ்மென்ட் அமைப்பை மறுசீரமைக்க இதன் மூலம் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்து, மேலாண்மை செலவுகளும் குறைவடையும். பணிநீக்கத்தின் மூலம் அவசியமில்லாத வேலைகளை தவிர்க்கவும், நேரடியாக பங்களிக்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அமேசான் முயற்சிக்கிறது.