சேலத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரிக் கோரிக்கை மனு வழங்கினர். இந்த குழுவில் பி.ஆர். பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கோரிக்கை, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சியை தடுக்கவும், ராசிமணலில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கும் ஆதரவு திரட்ட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியது. இதற்காக அனைத்து கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, பி.ஆர். பாண்டியன் மற்றும் அய்யாக்கண்ணு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை மனு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், காவிரி நீரை வழங்குவதில் கர்நாடக அரசு இடையூறு செய்கிறது என்றும், இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறினர்.
Leave a Reply