பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் அப்போது கோட்டூர், ஆனைமலை, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள PAP பாசன விவசாயிகள் தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் கலப்பதால் விவசாய நிலங்கள் பாழடைந்து வருவதாக மாசடைந்த தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி சார் ஆட்சியரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் திறந்த வெளியில் தென்னை நாரை உலர வைக்க தண்ணீரை பயன்படுத்துகின்றனர் அந்த நீரானது நேரடியாக விவசாய கிணறுகளிலும் PAP திட்ட கால்வாய்களிலும் கலக்கிறது இதனால் விவசாய நிலங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் கால்நடைகளுக்கு கூட தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்தி வருவதாகவும் இதுகுறித்து மாசுக்கட்டு வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழவு நீரால் மாசு படுவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எதிர்மனு தாக்கல் செய்துள்ளது ஆனால் இங்குள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாசு ஏற்படவில்லை என சொல்வது முரண்பாடாக உள்ளது.
தொழிற்சாலைகளால் மாசு ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்த வேண்டியது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பணி ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் இப்பகுதியில் விவசாய நிலங்கள் அழிந்துவிடும் என விவசாயிகள் தெரிவித்தனர் பொதுப்பணித்துறை,மாசு கட்டுப்பாட்டு வாரிய உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா உறுதி அளித்துள்ளார்.